பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் வெறியாட்டம் - 33 பேர் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் 23 பேரை சுட்டுக்கொன்று பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் முசாகெல் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பயணிகள் பேருந்து, டிரக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிகள் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற அவர்களை, பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 33-பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இந்த கொடூர சம்பவத்துக்கு பலுசிஸ்தான் மாகாண முதலமைச்சர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist rampage in Pakistan 33 people shot dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->