மரணமே அறியாத பிஞ்சு குழந்தை.. பிணங்களுடன் கட்டிப் புரண்ட சோகம்.! பதற வைக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தாய்லாந்தில் பன்யா கம்ராப் என்ற 34 வயது முன்னாள் போலீசார் 36 பேரை கொலை செய்து 10 பேரை காயப்படுத்தினார். இதில் 23 குழந்தைகள் மற்றும் 8 மாத கர்ப்பிணி உள்ளிட்டவர்களும் அடக்கம். 

அவர் இந்த கொலையை ஏன் செய்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருவதற்கு முன்பே தனது மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இப்படி அசாதாரணமான ஒரு கலவரத்தால் தாய்லாந்தில் மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் இறந்து போன குழந்தைகளுக்கு மத்தியில் படுத்திருந்த ஒரு குழந்தை மட்டும் ஆச்சரியம் தரும் விதமாக உயிர் தப்பியது. மூன்று வயது குழந்தையான எம்மி தனது பக்கத்தில் இருக்கும் தோழிகள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறார்கள் என்பதை கூட அறியாமல் அந்த குழந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டு எம்மி கிடந்தாள். 

Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal

இதை பார்த்த மீட்பு குழுவினர் பதறி போய் அந்த குழந்தையை மீட்டனர். அருகில் இருக்கும் ரத்தத்தை குழந்தை பார்க்க வேண்டாம் என்று அவரை அங்கிருந்து முகத்தை மூடி வேறு இடத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு என்ன நடந்தது என்பது கூட அந்த குழந்தைக்கு தெரியவில்லை.

அதன் பின் வழக்கம்போல அந்த குழந்தை பள்ளி சீருடை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்ல முயன்றுள்ளார். அங்கே ஆசிரியர்கள் பாடம் நடத்த முயன்ற போது அவர்களிடம் எங்கே எனது தோழிகள் என்று கேட்டுள்ளார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தவிர்க்க முடியாமல் உனது நண்பர்கள் இறந்து விட்டார்கள் என்று விளக்கி உள்ளனர். ஆனால், மரணம் என்றால் என்ன என்பதை அந்த குழந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thailand 36 murder case an 3 years girl make cry to others


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->