மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க - தாய்லாந்து அரசின் அதிரடி உத்தரவு!
Thailand air pollution
தாய்லாந்து நாட்டின் தலைநகரில் காற்று மாசடைந்திருப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று, அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் ஆறாவது இடத்தில் உள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக். இந்த நகரில் காற்று மாறு அளவை விட 14 மடங்கு கூடுதலாக காற்றுமாசடைந்திருப்பதாகக் சொல்லப்படுகிறது. இது உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் அளவை விட அதிகம்.
பாங்காக்கில் காற்றின் தரக் குறியீடு பிஎம் 2.5 என்ற அளவில் உள்ளது. இது ஆபத்தானது ஆகும். இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கு மூக்குத் திணறல், கண் எரிச்சல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
இந்நிலையில், தாய்லாந்தில் பாங்காக் மற்றும் தாய் மாகாணத்தில் திடிரென மிகக் கடுமையாக காற்று மாசடைந்திருப்பதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவசியம் இல்லாமல் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.