அமெரிக்காவில் ராணுவ அமைச்சராக தொகுப்பாளர் நியமனம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில், 538 இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் 248 வாக்குகள் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக  ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.

அப்போது, தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் ராணுவ அமைச்சராக முன்னாள் ராணுவ வீரரும், பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான பீட் ஹெக்சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக பணியாற்ற பீட் ஹெக்சேத்தை பரிந்துரை செய்துள்ளதாகவும், பீட் தனது வாழ்நாளை ராணுவத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஒரு போர்வீரராக கழித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் புத்திசாலி மற்றும் 'அமெரிக்காவே முதலில்' என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் என்றும், பீட் தலைமையில்,  ராணுவம் மீண்டும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழி நடத்துவார்கள் என்று டிரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The host was appointed as the minister of defense in the united states


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->