கர்ப்பிணி பெண் தலையில் ஆணி அடித்த சாமியார்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணுக்கு தலையில் கணவன் ஆணி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் வசிக்கும் தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்‌. இந்த நிலையில் அந்தப் பெண் தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் தனக்கு குழந்தை ஆணாகப் பிறக்க வேண்டும் என தொடர்ந்து வேண்டுதலில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் நம்பிக்கை இல்லாத அவர் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என்பதற்காக சாமியார் ஒருவரிடம் சடங்குகளை செய்யுமாறு கூறியுள்ளார்.

அவரும் சடங்குகளை செய்வதாக கூறி மறுநாள் அந்தப் பெண்ணை அழைத்துவர கூறியுள்ளார். அந்த வகையில் சடங்குகள் செய்வதாகக் கூறி கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்து உள்ளார் சாமியார். இதனால் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இந்தநிலையில் கர்ப்பிணிப்பெண் தலையில் ஆணி அடித்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதனையடுத்து பெஷாவர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும், அங்கு அவருக்கு ஆணி அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் அந்தப் பெண்ணின் தலையில் ஆணி இரண்டு இன்ச்சுக்கு அதிகமாக ஆணி புகுந்திருந்தது என்றும் ஆனியின் முனை மூளையில் பட்டிருந்தால் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தப் பெண் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து தப்பி உள்ளார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி பெண் தலையில் ஆணி அடிக்கப்பட்டு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The pastor who nailed the pregnant woman to the head


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->