மோடியும், மெலனியும் நீண்ட நாள் நட்பு, வைரல் ஆனா புகை படங்கள் !!
the photos of modi and meloni went viral
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் ஜி7 உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள போர்கோ எக்னாசியா ரிசார்ட்டில் ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி வந்தடைந்தபோது, இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மோடியை வரவேற்றார்.
"நமஸ்தே" என்று தொடங்கிய இருவருக்கும் இடையேயான உரையாடலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் சந்தித்த பிறகு #Melodi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.
#Melodi என்ற ஹேஷ்டேக் காரணம் இல்லாமல் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகவில்லை. இது இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவர்களால் தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல முறை இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜி20 உலக மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையேயான நட்பு தலைப்புச் செய்தியாக மாறியது. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அவரை வரவேற்றபோது, அவருடன் கைகுலுக்கி பேசினார்.
இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட பிறகு, இரு தலைவர்களும் சில நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தனர். இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலானது. மேலும், மெலோனியும் தனது பங்கிற்கு தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியுடன் எடுத்த ஒரு செல்ஃபியை வெளியிட்டார்.
அந்த இடுகைக்கு '#Melodi' என்ற ஹேஷ்டேக்குடன் "COP28 இல் நல்ல நண்பர்கள்" என்று தலைப்பிட்டார். இரு தலைவர்களின் புனைப்பெயர்களையும் இணைத்து இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் நெட்டிஸின்கள் மோடியையும் மெலோனியையும் இணைத்து பேச தொடங்கினர். மேலும் சமூக வலைத்தளங்களில் இவர்கள் அப்லோட் செய்த புகை படங்களுக்கு கீழ் இவர்களுக்கு காதலா? அல்லது நட்பா? என்ற பல கமெண்டுகள் வந்து குவிகின்றன.
English Summary
the photos of modi and meloni went viral