இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்குப் பின் அவரது மூத்த மகன் சார்லஸ்க்கு மன்னராக முடி சூட்டப்பட்டது. இதையடுத்து இளவரசியாக இருந்த 75 வயதான சார்லசின் மனைவி கமிலாவிற்கு ராணி(குயின் கன்சார்ட்) பட்டம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு திட்டங்களை தொடங்குவதற்காகவும், மக்களை சந்திப்பதற்காகவும் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ராணி கமிலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்ம்ஹர்ஸ்ட் பாலே பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கு பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற முடியாததற்கு ராணி கமிலா வருத்தம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கமிலா ராணி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Queen of England is infected with Corona positive


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->