பஸ்சில் சக பயணிகளை கத்தியால் தாக்கிய பெண்! 5 பேர் காயம்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் பஸ்சில் சக பயணிகளை கத்தியால் தாக்கிய பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெர்மனி நாட்டின் வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியா என்ற நகரில் சீகன் என்ற இடத்தில் 40 பயணிகளுடன் பஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது, பஸ்சில் இருந்த சக பயணிகளை பெண் ஒருவர் திடீரென எழுந்து கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 5 நபர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 3 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்து  பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், பயணிகளை தாக்கிய அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. அவர் போதை பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட நபராக இருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன என தெரியப்படுகிறது.

மேலும் இந்த தாக்குதலில், பயங்கரவாத நோக்கம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman attacked fellow passengers in the bus with a knife 5 injured Police investigation


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->