சவப்பெட்டியிலிருந்து உயிருடன் எழுந்து வந்த பெண்- அதிர்ச்சியில் உறவினர்கள்!! - Seithipunal
Seithipunal


இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட பெண், இறுதி சடங்கின் போது உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அங்கிருந்த அனைவரிடமும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் உடான் தனியைச் சேர்ந்த சடார்ன் ஶ்ரீபொண்லா என்ற 49 வயது பெண் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரும் வழியில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.  கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த  அந்த பெண் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தன்னுடைய மகளின் கடைசி நேரத்தை குடும்பத்தோடு செலவழிக்க விரும்புகிறோம் என்று கூறி அந்த பெண்ணின் தாயார் மாலி தன் மகளை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் மூச்சு நின்று விட்டதாக உடனிருந்தவர்கள் கூறுகின்றனர் . இதனையடுத்து அவரின் தாயார் உறவினர்களிடம் தன் மகள் உயிரிழந்த செய்தியை கூறியுள்ளார். 

புத்த மத வழக்கப்படி அவரது குடும்பத்தார் ஒரு சவப்பெட்டியில் அவரது உடலை வைத்து, இறுதி சடங்கிற்காக கோவிலுக்கு எடுத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் அவர்கள் சென்ற வேனை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் நேரடியாக சடலங்களை வைத்து பூஜை செய்யும் பாடுங் பட்டானா கோவிலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். கோவிலுக்கு செல்லும் வழியில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்த இறந்த பெண்மணி திடீரென தனது கண்களைத் திறந்துள்ளார்.

இதனை பார்த்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். சில நிமிடங்களில் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஆசுவாசமடைந்துள்ளனர். உடனடியாக அந்த பெண்ணின் தாயும் மற்ற உறவினர்களும் அங்குள்ள பான் டேங்க் பிரின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். தற்போது மருத்துவரின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்ததாக அறிவிக்கப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman who rose alive from the coffin Relatives in shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->