தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.! - Seithipunal
Seithipunal


தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.குறிப்பாக வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்தது.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பூங்காக்களில் ஆண்கள் இருக்கும் போது பெண்களை அனுமதிக்கக் கூடாது. திரைப்படம், கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல கூடாது மற்றும் ஜிம் மற்றும் பூங்காகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட முடியாமல் போய்விட்டது.

 

இந்த நிலையில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்‌. அவர்களை அங்கீகரிக்காதவரை பெண்களுக்கான உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The world should recognize the Taliban Pakistan former Prime Minister Imran Khan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->