வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்..!
The worlds tallest roller coaster blown up with a bomb
உலகின் மிக உயரமான உல்லாச சவாரி (ரோலர் கோஸ்டர்) வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்றில் உள்ள, சுமார் 450 அடி உயரமுள்ள 'கிங்டா கா' என்ற ரோலர் கோஸ்டர் உலகின் மிக உயரமான உல்லாச சவாரியாகும்.
இந்த 'கிங்டா கா' அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால், தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ரோலர் கோஸ்ட்டரை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால், இந்த 'கிங்டா கா' உல்லாச சவாரி வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 02 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
The worlds tallest roller coaster blown up with a bomb