உக்ரைன் மீது ஈஸ்டர் அன்று தாக்குதல் நடத்தப்படாது: ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு..!
There will be no attack on Ukraine on Easter Russian President Putin announcement
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றன. ஆனால், இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியாத நிலையில், மீண்டும் உக்ரைன் - ரஷியா இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷிய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; அதாவது, 'இன்று ஏப்ரல் 19 மாலை 06 மணிமுதல் (ரஷிய நேரப்படி) நாளை ஏப்ரல் 20 நள்ளிரவு 12 மணிவரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்த காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
English Summary
There will be no attack on Ukraine on Easter Russian President Putin announcement