பிரேசிலில் பயங்கரம் - 13 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் பயங்கரம் - 13 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக சாவோ பவுலோ உள்ளது. இந்த நகரத்தில் கவுருஜா மற்றும் சான்டோஸ் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் சிலரால் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இதையடுத்து போலீசார் தப்பியோடிய பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்காக சம்பவ பகுதியில் பாதுகாப்பிற்காக ராணுவம் களம் இறங்கப்பட்டது.

மேலும், சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறப்பு படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் இதுவரைக்கும் 13 பயங்கரவாதிகளை அந்த நாட்டின் சிறப்பு ராணுவ பிரிவினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

மேலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுத குவியல்கள், போதை பவுடர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டு ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirteen terorrist shot died in brezil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->