சிறைக்குள் ஏற்பட்ட மோதல் - பரிதாபமாக பறிபோன 31 கைதிகளின் உயிர்.!
thirty one prisoners died for two gangs attack in ecuador
சிறைக்குள் ஏற்பட்ட மோதல் - பரிதாபமாக பறிபோன 31 கைதிகளின் உயிர்.!
தெற்கு அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருமாறி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதனால், இந்த மோதல்களை தடுக்கும் விதமாக சிறைச்சாலைகளில் குழுத் தலைவர்களாக வலம் வரும் நபர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சமூக விரோத கும்பல் இருதரப்பாக பிரிந்து இருந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கிடையான மோதல் வெடித்து திடீரென கலவரமானது. அந்த கலவரத்தில் இரண்டு தரப்பினரும் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை ஏந்தி ஆக்ரோஷமான முறையில் சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரத்தில் 31 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், காவல் அதிகாரிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் தப்பியோடி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
English Summary
thirty one prisoners died for two gangs attack in ecuador