பெரு : திடீர் நிலச்சரிவால் 36 பேர் உயிரிழப்பு.!
thirty six peoples died for land slide in peru
தென் அமெரிக்கா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நாடு பெரு. இந்த நாட்டில் இடைவிடாது பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, தெற்கு பெருவில் உள்ள பல கிராமங்களுக்குள் மண், நீர் மற்றும் பாறைகள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலச்சரிவால் பாலங்கள், பாசன கால்வாய்கள் மற்றும் சாலைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிலச்சரிவில் இதுவரை முப்பத்தாறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பெரு நாட்டின் மிஸ்கி என்ற இடத்தில் முப்பத்தாறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மரியானோ நிக்கோலாஸ் வால்கார்செல் நகராட்சியின் சிவில் பாதுகாப்பு அதிகாரி வில்சன் குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து, இந்த நிலச்சரிவின் போது சிலர் வேனின் மீது ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அந்த வேன் துரதிர்ஷ்டவசமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரேகிபாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பத்தாறாக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
thirty six peoples died for land slide in peru