மகாராஷ்டிரா : சிக்கன் கிரேவியில் கிடந்த எலி - உணவக மேலாளர் உள்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா : சிக்கன் கிரேவியில் கிடந்த எலி - உணவக மேலாளர் உள்பட 3 பேர் கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங் முடித்துவிட்டு சபர்பன் பந்த்ரா பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சிக்கன் கிரேவியை ஆர்டர் செய்தார். 

அதன் படி அவருக்கு உணவும் பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சிக்கனுடன் சேர்ந்து செத்த எலியும் இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி எலியை உணவக ஊழியர்களிடம் காண்பித்ததை அடுத்து அவர்கள் வங்கி அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். 

இதையடுத்து சிறிது நேரத்திலேயே வங்கி அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே அவர் அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் வங்கி அதிகாரி உணவகம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட உணவக மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three hotel employers arrested for rat died in chicken grevy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->