பிரேசில் : வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி - 12 பேர் மாயம்.!! - Seithipunal
Seithipunal


பிரேசில் : வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி - 12 பேர் மாயம்.!!

உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடான பிரேசில் நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டே டோ சுலில் பகுதியில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று  அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

அதன்படி கடந்த சில நாட்களாக நாட்டில் கன மழை பெய்து வருவதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் பல நகரங்களில் அவசர நிலை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அந்த நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் சுமார் 3½ லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. மேலும், மின்சாரம் இல்லாததால் இருபது பள்ளிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. 

இதைத்தொடர்ந்து இந்த வெள்ளத்தில் சிக்கி மூன்று பேர் பலியாகியதாகவும், 12 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died and twelve peoples missing floods in brezil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->