எந்த ஒலி இடையூறும் இல்லாமல் ராணியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உலகை விட்டுப் பிரிந்தார். இவரது மறைவுக்கு பல நட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. 

நாளை காலை வரை ராணியின் உடல் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர், ராணியின் சவப்பெட்டி அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கிற்காக அருகிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. 

ராணிக்கு மரியாதையை செலுத்தும் விதமாகவும், எந்த வித ஒலி இடையூறுகளும் இல்லாத வகையில் இருப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களையும் ரத்து செய்துள்ளது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் காலை 11:40 மற்றும் மதியம் 12:10 மணி வரை 30 நிமிடங்களுக்கு எந்த விமானம் இயக்கப்படாது. 

இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான பயணிகளை பாதிக்கும் என்று தெரிவித்து, பயணிகளின் சிரமத்திற்கு விமான நிலையம் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டது. எனினும், ஒலி இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomarrow queen elezabeth body Modesty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->