ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியை போட்டு தள்ளிய இஸ்ரேல்!!
Top Hamas commander Ali Qadi killed by Israel army
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காஜா எல்லையை முழுமையாக மூடிய இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழி தாக்குதலை தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. காஜா பகுதியில் வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழி தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை வழி நடத்திய ஹமாஸ் படையைச் சேர்ந்த தளபதி அலி காதி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலியர்களை கடத்தி கொலை செய்ததாக கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேலால் கைது செய்யப்பட்டவர் அலி காதி.
அதன் பிறகு கடந்த 2011 னஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டவர் அலி காதி அதன் பிறகு அவாஸ் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்து வருகிறார். ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத் தளபதியாக திகழ்ந்த அலி காதி கொல்லப்பட்டிருப்பதுமாஸ் படையினருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
English Summary
Top Hamas commander Ali Qadi killed by Israel army