கனமழையால் ரெயில் சேவை முடக்கம் - எங்குத் தெரியுமா?
train service stopped jappan for floods
கனமழையால் ரெயில் சேவை முடக்கம் - எங்குத் தெரியுமா?
ஆசியக் கண்டத்தில் பல தீவுகளால் ஆன ஜப்பான் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த அறிவிப்பின் படி கியூஷு மற்றும் சுகோகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், நாட்டில் பல ரெயில் தடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஹிரோஷிமா மற்றும் ஹகாட்டா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சன்யோ ஷிங்கன்செனில் புல்லட் ரெயில் செல்லும் வழித்தடத்தில் வெள்ளம் அதிகளவில் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் தற்காலிகமாக ரெயில் சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதாக மேற்கு ஜப்பான் ரெயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
English Summary
train service stopped jappan for floods