அதிபர் ஆனதும் டிரம்ப் செய்த அதிரடி நடவடிக்கை!...அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை! - Seithipunal
Seithipunal


உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில், 538 இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் 248 வாக்குகள் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக  ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், டிரம்பின் பிரசார மேலாளராக இருந்து வந்த சூசி வைல்ஸ் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றிகளில் ஒன்றை அடைய எனக்கு சூசி வைல்ஸ் உதவினார் என்றும், அவர் கடின உழைப்பாளி மற்றும் புத்திசாலி. அவர் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற  அயராது உழைப்பார் என்று தெரிவித்து உள்ளார். அமெரிக்க வரலாற்றில்  வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக  பெண் ஒருவர் நியமனம் செய்யப்படுவது  
இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சூசி வைல்ஸ் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் முதல் பெண் தலைமை அதிகாரி என்ற பெருமையை பெறுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump action after becoming president this is the first time in american history


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->