ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் அதிரடி கைது..!

அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது முன்னாள் அதிபர் ட்ரம்ப் தன்னுடன் ரகசிய உறவு வைத்திருந்தது குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். தேர்தல் பிரசார நேரத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. 

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஸ்டார்மி பேசாமல் இருப்பதற்காக அவருக்கு ரூ.1.07 கோடி வழங்கப்பட்டது. இந்த தொகையை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. 

இருப்பினும், அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடத்தி அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணை நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக ட்ரம்ப் புளோரிடாவில் இருந்து விமானத்தில் நியூயார்க்குக்கு புறப்பட்டு அங்குள்ள டிரம்ப் டவர் கட்டிடத்திற்குச் சென்றார். இதைத் தொடர்ந்து ட்ரம்ப்  வழக்கு விசாரணைக்காக இன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். 

அங்கு, குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து கைரேகையும் பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trump arrested for money giving to pornographic actress case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->