முன்னாள் அமெரிக்க அதிபருக்கு தினமும் 7.5 லட்சம் அபராதம்.! - Seithipunal
Seithipunal


நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தினமும் 7.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூயார்க் நீதிமன்றத்தில் டிரம்பின் தொழில் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க மார்ச் மாதம் 3-ஆம் தேதி வரையிலும், பின்பு மார்ச் 31 ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் டிரம்ப் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதால் நீதிமன்ற உத்தரவை அவமதித் ததற்காக கண்டனம் தெரிவித்ததுடன் மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை தினமும் 7.5 லட்சம் அபராதம் அளிக்க வேண்டும் என நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அபராதம் டிரம்ப் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்பதற்காக, அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trumped fined seven lakhs fifty thousand a day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->