ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை.! துருக்கி, சவுதி அரேபியா கண்டனம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்தபின், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை, ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விமானத்தில் ஆண்கள் துணையின்றி செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முறையாக எந்த வித காரணமும் தெரிவிக்கப்படாமல் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிப்பதாக தாலிபன் அரசு அறிவித்திருந்தன. 

இதை உடனடியாக அமல்படுத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் மாணவிகளை கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவிகள் மிகுந்த வருத்தத்துடன் வீடு திரும்பினர். இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முறையற்ற இந்த நடவடிக்கைக்கு, இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா மற்றும் துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சா் மேவ்லுட் காவுசோகுலு, பெண் கல்விக்கு தடை விதிப்பது இஸ்லாமியத்திற்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடை தொடர்பாக சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பெண்களின் கல்விக்கு தடை விதிக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey and Saudi Arabia condemns ban on women education in universities


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->