துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதத்திற்கு அவசர நிலை பிரகடனம்! - Seithipunal
Seithipunal


துருக்கியின் தெற்கு மற்றும் சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து பெரும் உயிர், பொருள் தேத்ததாய் உண்டாகியுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டிட இடிபாடுகளில் தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்த வண்ணம் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்கு உயரலாம் என்று உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. 

சிரியாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், தென்கிழக்கில் அமைந்துள்ள 10 மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அதிபர் தாயிப் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey Earthquake Erdogan 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->