நைஜீரியாவில் வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர் லாரி - 20 பேர் பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர் லாரி - 20 பேர் பலியான சோகம்.!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. இந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து,
உலக நாடுகள் பலவற்றிற்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்போது எண்ணெய் டேங்கர்கள் வெடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் நைஜீரியா நாட்டில் உள்ள ஒண்டோ மாகாணத்தில் இன்று எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மூன்று குழந்தைகள், ஒரு கர்ப்பிணி உட்பட மொத்தம் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தால், லாகோஸ்-பெனின் விரைவுச் சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் டேங்கர் லாரி வெடித்துச் சிதறிய விபத்தால், அப்பகுதி தீப்பிழம்புடன் காட்சியளிக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty peoples died for oil tanker lorry explossion in nigeria


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->