பாகிஸ்தான் : மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி.!
twenty three peoples died floods in pakisthan
கனமழையால் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக ஷேக்புரா, நரொவெல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், நரோவால் மாவட்டத்தில் 5 பேரும், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேரும் அடங்குவர்.
அதுமட்டுமல்லாமல், 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், 6 பேர் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைஅனுபி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே வருகிற 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று பாகிஸ்தான் நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
twenty three peoples died floods in pakisthan