ஜப்பான் : ஓடுபாதையில் விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு.!!
two flight colied on ground jappan airport
ஜப்பான் : ஓடுபாதையில் விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு.!!
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்துக்கு தாய் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, அதே ஓடுபாதையில் ஈவா ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நின்றது.
இந்த விமானத்தின் மீது தாய்லாந்திலிருந்து வந்த விமானம் மோதியது. இதில் தாய் ஏர்வேஸ் விமானத்தில் இறக்கை உடைந்து கீழே விழுந்தது. இதனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டு உடனே தொழில்நுட்ப குழுவினர் விமானத்தில் வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து விமான ஊழியர்கள் ஓடுபாதையில் சிதறி கிடந்த விமானத்தின் பாகங்களை விமான நிலைய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக விமான நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
two flight colied on ground jappan airport