உக்ரைன் போர் : இங்கிலாந்து நாட்டின் தன்னார்வ ஊழியர்கள் 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போர் இன்னும் சில வாரங்களில் ஓராண்டை நிறைவுபெற உள்ளது. 

இந்த போரில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் நாட்டிற்கு கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக சென்ற வெளிநாட்டினர் போர் தொடங்கியதும் அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பினர். 

அதே நேரம், இந்த போருக்கு இடையே வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு  உதவிகளை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்சா உள்ளிட்ட இரண்டு தன்னார்வ உதவி ஊழியர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உக்ரைன் நாட்டில் தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வந்தனர். 

அதன் படி, இவர்கள் இருவரும் கடந்த 6-ந் தேதி கிழக்கு உக்ரைன் நாட்டில் உள்ள சோலேடார் நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாயமாகி உள்ளனர். 

இந்த நிலையில் அவர்கள் இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, அவர்கள் இருவரும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களது கார் மீது பீரங்கி குண்டு வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை உறுதி செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம், உயிரிழந்தவர்களின் குடும்பதட்டினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டில் இங்கிலாந்து குடிமக்கள் எவரேனும் இருந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two ingland helpers died in ukraine war


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->