நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டத்தில் போலீசார் உடன் மோதல்; இருவர் உயிரிழப்பு; தொடரும் பதற்றம்..!
Two people died in clashes with police in Nepal during a protest demanding a return to monarchy
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பல இடங்களில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நேபாளத்தில், 200-இல், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-இல் குடியரசு உருவானது. அங்கு ஜனநாயக நடைமுறை படி நடந்த தேர்தல் நடந்தாலும், கூட்டணியில் குழப்பம் ஏற்படுவதும், பிரதமர்கள் பதவி விலகுவதும் , ராஜினாமா செய்வதும் என அரசியல் குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்நாட்டில் அடிக்கடி போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச்28) அந்நாட்டில் நடந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு, பல இடங்களில் போராட்டக்காரர்கள் நாச வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுக்க முற்பட்ட போலீசார் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இடையில், மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் போராட்டக்காரர் ஒருவரும், பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அங்கு பதற்றத்தை தணிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், காத்மாண்டுவின் முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Two people died in clashes with police in Nepal during a protest demanding a return to monarchy