மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் உள்பட இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் மதரஸா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்து மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து புகார் வந்தது. 

அந்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்னதாக மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதரஸாவின் அறங்காவலரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விஷயத்தில் அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவர்களை மிரட்டியுள்ளார்.

அதனால், குற்றச் சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக அறங்காவலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for harassment in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->