அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து - இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள அலபாமா மாகாணம் மேடிசன் நகரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானத்தில் பயணம் செய்த இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த ஹெலிகாப்டர் ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமான யுஎச்-60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் என்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், விபத்து நடைபெற்ற இடத்தில் கரும்புகை எழுந்தது பதிவாகி உள்ளது. ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for helicopter accident in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->