தக்காளி திருடிய இரண்டு வாலிபர்கள் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தக்காளி திருடிய இரண்டு வாலிபர்கள் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!

மகாராஷ்டிராவில் வேளாண் பொருள் சந்தையில் இருந்து 90 கிலோ தக்காளியைத் திருடிச் சென்ற இரண்டு வாலிபர்களை சந்தையின் காவலாளிகள் விரட்டிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விலை தொடா்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஒருசில இடங்களில் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரைக்கும், சில இடங்களில் ஒரு கிலோ ரூ.200 வரையும் எட்டியுள்ளது.

தக்காளியின் இந்த விலை உயர்வால், தக்காளி திருடுபோகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். இதன் காரணமாக தக்காளி தோட்டங்கள் மற்றும் அதிகம் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களுக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள வேளாண் பொருள் சந்தையில் நள்ளிரவில் இரண்டு பேர் உள்ளே நுழைந்து அங்கு கூடைகளில் இருந்த 90 கிலோ தக்காளியை திருடிக் கொண்டு சந்தையில் இருந்து வெளியேற முயன்றனா். 

அப்போது அவா்கள் மீது சந்தேகமடைந்த காவலாளிகள், அவா்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயன்றபோது அவா்கள் இருவரும் திடீரென தக்காளியுடன் தப்பியோட முயற்சி செய்தனர். உடனே காவலாளிகள் அவா்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். 

அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள் அதே சந்தையில் வேலைபாா்க்கும் தொழிலாளா்கள் என்பதும், விலை அதிகம் உள்ளதால் தக்காளியைத் திருடிச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை எச்சரித்து விடுவித்தனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples steal tomatto in maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->