உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்க இங்கிலாந்து உறுதி.!
UK Committed to Supply Ukraine with More weapons
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் கடந்த வாரம் இத்தாலி, வாடிகான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் சென்று அந்நாட்டின் தலைவர்களை சந்தித்து போரின் போக்கை மாற்றுவது குறித்து விவாதித்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று ஜெலன்ஸ்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில், எனது நண்பர் ரிஷி சுனக்கை சந்தித்து போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் உக்ரைன் போரின் போக்கை மாற்றுவதற்காகவும், வான் பாதுகாப்பிற்காகவும் நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் புதிய நீண்ட தூர தாக்குதல் நடத்தும் ட்ரோன்களை உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளது.
English Summary
UK Committed to Supply Ukraine with More weapons