உக்ரைன் அதிபருக்கு ஏற்பட்டது விபத்தா? இல்லை கொலை முயற்சியா?  - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாத கடைசியில் இருந்து, உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 6 மாதங்களை கடந்து கொண்டிருக்கிறது. 

இப்போரில், ரஷ்யா கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டெடுக்கும் பணியில் தற்போது, ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இதுபற்றி அந்நாட்டின் "தி கீவ் இண்டிபென்டெண்ட்" என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்ஹை நிகிபோரோவ், தனது முகநூல் பதிவில், அதிபரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இதையடுத்து, ஜெலன்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக ஜெலன்ஸ்கிக்கு பரிசோதனை செய்தனர். பிறகு அவரது வாகன ஓட்டுனருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. 

அவருக்கு லேசான காயமே ஏற்பட்டு உள்ளதனால்,  அவர் ஆம்புலன்ஸ் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று செர்ஹை நிகிபோரோவின் முகநூல் தகவல் தெரிவிக்கின்றது


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukrain president car accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->