லைமன் பகுதியை கைப்பற்றிய உக்ரைன்.! வெளியேற்றப்பட்ட ரஷ்யா.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாக ரஸ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் வடக்கில் உள்ள லைமன் பகுதியிலிருந்து ரஷிய படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்த பகுதியை, ரஷியா தனது ராணுவ செயல்பாடுகளுக்கான தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக பயன்படுத்தி வந்தது. 

இந்நிலையில், ரஷிய வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், லைமன் பகுதியை உக்ரைன் படைகள் சுற்றி வளைக்க தொடங்கியதால், தனது படைகள் அந்த கோட்டையை கைவிட்டதாக அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.

இது உக்ரைனுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், ரஷியாவிற்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ரஷியா நாட்டுக்கு மிக நெருங்கிய நபரான ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செச்சினியா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்ததாவது, "ரஷியா குறைந்த சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு உக்ரைன் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, "லைமனைக் கைப்பற்றினால், லுஹான்ஸ்க் பகுதிக்குள் உக்ரைன் படைகள் முன்னேற முடியும். அதற்கு லைமன் பகுதி மிக முக்கியமானது, ஏனெனில் இது உக்ரேனின் டான்பாஸ் பகுதியின் விடுதலையை நோக்கிய அடுத்த படியாகும். இதன்மூலம், க்ரெமின்னா மற்றும் சீவிரோடோனெட்ஸ் பகுதிகளுக்கு செல்ல இது ஒரு அருமையான வாய்ப்பு. இது மனரீதியாக மிக முக்கியமானது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukrain sve in laiman part


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->