ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதட்டம்.. இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த உக்ரைன்.!!
ukraine ambassador thanks to india
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி, இந்திய தூதரகமும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் மற்றும் உக்ரைனை சுற்றி உள்ள நிலைமை கடுமையானது. ஆனால் சிக்கலானது அல்ல. எங்களது நட்பு நாடுகளை அமைதி காக்கும்படி எங்கள் அதிபர் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மோதலுக்கு நாங்கள் ராஜதந்திர தீர்வுகளை தேடி வருகிறோம். கெய்வ் மற்றும் மாஸ்கோ இடையே பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருகிறது. உக்ரைனில் உள்ள சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். இந்திய மாணவர்களை பெருமளவில் வெளியேற்றுவதற்கு காரணத்தை நான் பார்க்கவில்லை. அவர்களின் நிலைமையை கண்காணிக்க வேண்டும். ஆனால் பீதி அடைய கூடாது.
இந்த விவகாரத்தில் சமநிலையான அணுகுமுறையை எடுத்த இந்திய அரசுக்கு நன்றி. உக்ரைன் அரசாங்கம் தொடர்ந்து வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அனைத்து நிகழ்வுகளும் குறித்தும் இந்திய தரப்பிற்கு தகவல் அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
ukraine ambassador thanks to india