அணுக்கழிவுகள் மூலம் ஆயுதங்கள் தயாரிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு - உக்ரைன் மறுப்பு
Ukraine denies Russia allegation of making weapons using nuclear wastes
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அணு ஆயுத கழிவுகளை பயன்படுத்தி உக்ரைன் நாசகார ஆயுதங்களை தயாரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இந்த ஆயுதங்கள் மூலம் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்றும், அது பேரழிவை உண்டாக்கும் என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த குற்றச்சாட்டிற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் அணுசக்தி அமைப்பான எனா்கோடம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ரஷ்ய கட்டுப்பாட்டில் தான் ஸபோரிஷியா அனுமின் நிலையம் உள்ளது எனவும், அணுமின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் அணுமின் நிலைய கழிவுகளை ரஷ்யா சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணுசக்தி கழிவுகளை பயன்படுத்தி ரஷ்யா ஆயுதங்களை தயாரித்து வருவதாகவும், உலக நாடுகளின் கவனத்தை திருப்புவதற்காக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ukraine denies Russia allegation of making weapons using nuclear wastes