போர் தொடங்கி ஓராண்டு நிறைவு.! புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்.!
Ukraine issues new currency to mark first anniversary of war
1949ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது.
தற்பொழுது போர் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்ய படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உக்ரைன் மத்திய வங்கி புதிய கரன்சி நோட்டுகளை வெளியிட்டுள்ளது.
இதில் உக்ரைனின் மத்திய வங்கி வெளியிட்ட 20 ஹிரிவ்னியா கரன்சி நோட்டின் ஒரு பக்கத்தில் ராணுவ வீரர்கள் தேசியக் கொடியை உயர்த்துவது போன்றும், மறுபக்கத்தில் மக்களின் இரண்டு கைகள் டேப்பால் கட்டப்பட்டிருக்கும் படம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதுகுறித்து உக்ரைன் நேஷனல் பேங்க் கவர்னர் ஆண்ட்ரி பிஷ்னி, போரின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஒரு வருடத்தின் உணர்வுகள், வடிவங்கள், உள்ளடக்கம் மற்றும் சிறிய சிறிய நினைவுகளையும் வெளிப்படுத்தும் ஒரு நினைவு ரூபாய் நோட்டை வெளியிட முடிவு செய்தோம். அதற்காகவே புதிய 20 ஹிர்வ்னியா கரன்சி நோட்டுகளை வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Ukraine issues new currency to mark first anniversary of war