பாக்முட் பகுதியில் நிலைமை சீராகி வருகிறது - உக்ரைன்
Ukraine says situation is stabilizing in bakhmut
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும் உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய படைகள் மற்றும் வாக்னர் கூலிப்படைக்கும் இடையே தீவிர தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாக்முட் மற்றும் அதைச் சுற்றி பகுதிகளில் நிலைமை சீராகி வருவதாக என்று உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்பொழுது, பாக்முட் பகுதியில் ரஷ்ய படையில் தாக்குதலுக்கு தேவையான டேங்குகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், ரஷ்யாவின் தாக்குதல் திட்டங்களை முறியடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனின் பாக்முட் நகரம் எளிதில் ரஷ்யாவிடம் வீழ்ச்சியடையும் என வல்லுநர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது உக்ரைன் படைகள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ukraine says situation is stabilizing in bakhmut