சஜித் மிர்ரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடை விதித்ததற்கு காரணம் என்ன?
UN Security Council request in inrenational terrorist alounce
மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு புள்ளியாக செயல்பட்ட, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான சஜித் மிர்ரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா மற்றும் இந்தியா சார்பில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள சீனா, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடமால் தடுத்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா கொண்டு வந்த தீர்மானங்களையும் சீனா தடுத்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் மிர்ருக்கு எதிரான தீர்மானத்தைசீனா தடுத்ததை நியாப்படுத்தியுள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்ததாவது,
"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணிகளில் சீனா விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப பொறுப்பான முறையில் பங்கேற்கிறது. அந்த வகையில் சஜித் மிர்ரின் தீர்மானத்தில் சீனாவின் முடிவு நடவடிக்கைகள் தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றன" என்று மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
English Summary
UN Security Council request in inrenational terrorist alounce