ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி.!!
UN security Council Resolution failed resolution failed
உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மக்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கியும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதி மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர் எதிர்ப்பு கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆலோசனை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தீர்மானத்தை முறியடித்தது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளது.
English Summary
UN security Council Resolution failed resolution failed