82 நாடுகளில் 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கி செல்வதாக ஐநா எச்சரிக்கை.!
UN warns that 345 million people in verge of starvation
பன்னாட்டு சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள தானிய ஏற்றுமதி தடை, பணவீக்கம் மற்றும் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் உலகில் 82 நாடுகளில் 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கி செல்வதாக ஐநா எச்சரித்துள்ளது.
மேலும் 82 நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் கொரோனாக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் போரினால் 70 மில்லியன் மக்கள் பட்டினியில் தள்ளப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய அவசர நிலையை நாடுகள் எதிர்கொண்டு வருவதாகவும், ஐநா சபையின் உணவு திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார்.
மேலும் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
UN warns that 345 million people in verge of starvation