ரஷ்யா உக்ரைன் இடையே சமரசம முயற்சி! உக்ரைன் அதிபரை ஐநா பொதுச்செயலாளர் இன்று சந்திப்பு.!
United nations CHIEF TO meet Ukraine president
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சமரச முயற்சிக்காக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் பொருளாதார இழப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவையும் சந்தித்துப் பேசியதை அடுத்து, இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார் . இந்த சந்திப்பில் உக்ரைன் விவகாரங்களைப் பற்றி விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
United nations CHIEF TO meet Ukraine president