தைவானுக்கு ரூ.8,768 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


தைவானுக்கு ரூ.8,768 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக சீனா நினைத்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்தார்.

மேலும் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 முறை தைவான் சென்றனர். இதனால் தைவான், சீனா நாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தைவானுக்கு ரூபாய் 8,768 கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை செனட் சபையில் பெறுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் இதில் 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், வான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் 100 ஏவுகணைகள் மற்றும் ரேடார் கண்காணிப்பு விரிவாக்க அமைப்பு உள்ளிட்ட பல ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்யப்படும் என ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US decision to sell military equipment to Taiwan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->