அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன். இவரது மகள் நவோமி பைடன் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றது. ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். 

ஜனாதிபதி குடும்ப உறுப்பினர்களின் திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அரிதாகவே வெள்ளை மாளிகையில் நடைபெறும். அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமண நிகழ்ச்சி இதுவாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President Joe Biden granddaughter weds in White House ceremony


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->