சுவீடன், பின்லாந்து நேட்டோ உறுப்பினர் நாடுகளாக இணைவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ரஷ்யாவுக்கும் இடையே ஆன போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் செயல்பாடு காரணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்களாக இணைய விரும்பின. இதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் மேட்ரிட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விரு நாடுகளும் ஆலோசனைகள் மேற்கொண்டன. இதனை தொடர்ந்து துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது என்று துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து துருக்கியின் எதிர்ப்பு விலகிய நிலையில் ஸ்வீடன், துருக்கி மற்றும் பின்லாந்து என முத்தரப்பு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துருக்கிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் தகுதி வாய்ந்த ராணுவங்களை கொண்ட வலிமையான ஜனநாயக நாடுகள். அவர்கள் நேட்டோவின் உறுப்பினராவது வரவேற்பதுடன், அது கூட்டணி நாடுகளின் பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President Joe Biden welcomes Sweden Finland to join NATO member


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->