அமெரிக்க அதிபர் தேர்தல் : குறைவான தீமையை தேர்வு செய்யுங்கள்!...போப் கருத்து! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முக்கிய வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.  இந்த தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும் என்றும், இரண்டு தீமைகளில் குறைவானவர் யார் என்று கேள்வி எழுப்பி, அந்த பெண்மணி அல்லது ஜென்டில்மேன் இதில் யார் என்பது எனக்கு தெரியாது என்று கூறினார். 
மேலும், 
அமெரிக்கர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து வாக்களிக்க செல்வதற்கு முன்பு, அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், வாக்களிக்காதது நல்லது அல்ல என்று தெரிவித்துள்ளார். 

மேலும், கருக்கலைப்பு ஒரு மனிதனைக் கொல்கிறது என்றும், கருக்கலைப்புக்கு எந்த காரணமும் இருக்க முடியாது . இது ஒரு படுகொலை இந்த விஷயங்களைப் பற்றி நாம் தெளிவாகப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Presidential Election Choose the Lesser Evil Pope Says


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->