சவுதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் - அமெரிக்கா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியா எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ஈரான் தாக்குதல்  நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். 

இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்ற நிலையில், பின்னணியில் ஈரான் இருப்பதாக சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின. இதனால், ஈரான் - சவுதி இடையே பதற்றம் நிலவியது.

இதையடுத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்த கடந்த ஓராண்டுகளாக முயற்சித்து வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்ததாவது, சவுதி அரேபியாவில் உள்ள எரிசக்தி உள்கட்ட அமைப்பு மீது ஈரான் தாக்குதல் நடந்த வாய்ப்பிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் எங்கள் நலன்களையும், பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளையும் பாதுகாக்க நாங்கள் தயங்க மாட்டோம். தற்போது பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு நிலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை இல்லை. இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கவலை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US warns Iran may attack Saudi Arabia energy infrastructure


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->