உக்ரைன் போர் விவகாரம்: புதினிடம் பேசிய பிரதமர் மோடி.! இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது உக்ரைன் மீது ரஷ்ய இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் மீது 60 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் சில மணி நேரங்கள் உரையாடினார். இதில் உக்ரைனில் நடந்து வரும் வன்முறைகளையும் நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, உக்ரைன் போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை மீண்டும் அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த், பிரதமர் மோடியின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அந்தக் கருத்துகள் நடக்கும்போது வரவேற்போம். 

மேலும் மற்ற நாடுகள் ரஷியாவுடனான ஈடுபாடு குறித்து தாங்களாகவே முடிவெடுக்கும். போரின் பாதிப்புகளைத் தணிக்க கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US welcomes India stance on the issue of the Ukraine war with PM modi Putin over the phone


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->